குடியாத்தத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வேலையில்லா இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு வரும் 30ம் தேதி

1 month ago 5

வேலூர், நவ.19: குடியாத்தத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலையில்லா இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 30ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, தொழிற் பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, செவிலியர், பார்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித்தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம். தனியார்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாயப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. ஆகவே, தனியார்துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்று தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குடியாத்தத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வேலையில்லா இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு வரும் 30ம் தேதி appeared first on Dinakaran.

Read Entire Article