சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி நாளையும் ஜன.26ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 12 மணிக்கு குமரி செல்லும்; ஜன.26-ல் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வரும்.
சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்; ஜன.26-ல் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு சென்ட்ரல் வரும்.
The post குடியரசு தினத்தை ஒட்டி நாளையும் ஜன.26ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.