குடிபோதையில் தகராறு நண்பரை பாட்டிலால் குத்தி கொன்றவர் கைது

3 months ago 15

பெங்களூரு: பெங்களூருவில், குடிபோதையில் இருந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் மது பாட்டிலால் குத்தி கொலைசெய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு பேட்டராயனபுரா போலீஸ் சரகம் குட்டதஹள்ளி பகுதியை சேர்ந்தவர் யோகேந்திர சிங் (25), டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் உமேஷ். 2 பேரும் நண்பர்கள். யோகேந்திர சிங், நரசாபுரா தொழில் பேட்டையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தசராவை முன்னிட்டு விடுமுறை என்பதால் உமேஷுக்கு போன் செய்து அவரின் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் பிறகு இரண்டு பேரும் மது அருந்தினர். அப்போது அவர்கள், இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மது போதையில் பழைய சம்பவங்களில் ஒன்றை உமேஷ் கூறியதால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கீழே கிடந்த காலி பாட்டிலால் யோகேந்திர சிங்கின் கழுத்தில் உமேஷ் குத்தியல் ரத்தவெள்ளத்தில், யோகேந்திரா உயிரிழந்தார். இதையடுத்து உமேஷ் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், யோகேந்திர சிங்கின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து தலைமைவாக இருந்து உமேஷை கைது செய்தனர்.

The post குடிபோதையில் தகராறு நண்பரை பாட்டிலால் குத்தி கொன்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article