குஜராத்துக்கு எதிரான ஆட்டம்: மும்பையின் 13வது வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் - என்ன காரணம்..?

15 hours ago 3

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது.

குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பையின் இம்பேக்ட் வீரராக கரண் சர்மா (12வது வீரர், ரோகித் சர்மாவுக்கு பதிலாக) முதல் இன்னிங்சில் களம் புகுந்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் மும்பை பந்துவீச்சின் போது இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் இருந்த அஸ்வனி குமார், கார்பின் போஷ்க்கு பதிலாக களம் புகுந்தார். தொடர்ந்து பந்துவீசிய அஸ்வனி குமார் 4 ஓவரில் 28 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், மும்பையின் பிளேயிங் லெவனில் இருந்த வீரர்கள் (11 பேர்), இம்பேக்ட் வீரர் (12வது வீரர்) உட்பட 13வது வீரராக அஸ்வனி குமார் களம் புகுந்தார்.

இந்த விவகாரம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பான விளக்கத்தை இங்கு காணலாம். அதாவது, இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கரண் சர்மா (12வது வீரர்) இம்பேக்ட் வீரராக களம் இறங்கினார். தொடர்ந்து கார்பின் போஷ்க்கு பதிலாக அஸ்வனி குமார் கன்கசன் சப் வீரராக களம் புகுந்தார்.

மும்பை பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 20வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் கிருஷ்ணா வீசிய பந்து கார்பின் போஷின் தலையில் பலமாக தாக்கியது. இதன் காரணமாக அவர் கன்கசன் சப் வீரராக வெளியேற்றப்பட்டு அஸ்வனி குமார் களம் இறங்கினார். 


pic.twitter.com/PlLzOoI8wD

— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) May 6, 2025


Read Entire Article