
அகமதாபாத்,
குஜராத்தின் ஜாம்நகரில் இன்று, இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. ஜாகுவர் ரகத்தை சேர்ந்த அந்த போர் விமானத்தில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது விபத்துக்குள்ளனதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
விமானம் கீழே விழுந்தததில் தீ பிடித்து எரிந்தது. ஒரு விமானி, விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேறி உயிர் தப்பிய நிலையில், உடன் இருந்த மற்றொருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜாகுவர் ரக போர் விமானம் இரண்டு என்ஜின் கொண்டது ஆகும். 1970 களில் இருந்தே இந்திய விமானப்படையில் இந்த ஜாகுவர் ரக போர் விமானம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.