![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35545240-drugsseized.webp)
காந்திநகர்,
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் காம்பாட் பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் உற்பத்தி பிரிவில் குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில், கடலோர காவல்படை கப்பல்களின் நடமாட்டம் குறித்த விவரங்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.