குஜராத்தின் கட்ச் பகுதியில் லேசான நிலஅதிர்வு

2 days ago 3

அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நேற்று காலை 10.6 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவானது. பச்சாவுக்கு வட- வடகிழக்கே 18 கிமீ தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலஅதிர்வால் எந்த உயிர் சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை.

இந்த மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் 3 நிலநடுக்கங்கள் பதிவானது. டிசம்பர் 23ம் தேதி ஏற்பட்ட நிலஅதிர்வு 3.7ஆகவும், டிசம்பர் 7ம் தேதி ஏற்பட்ட நிலஅதிர்வு 3.2ஆகவும் பதிவானது. இதேபோல் கடந்த மாதம் 18ம் தேதி ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 4ஆக பதிவானது.

The post குஜராத்தின் கட்ச் பகுதியில் லேசான நிலஅதிர்வு appeared first on Dinakaran.

Read Entire Article