பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்பதை அமெரிக்க டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர். இதை புத்தாண்டு வாழ்த்து செய்தியாக தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் தவிக்கிறேன்.
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் எனக்கு தற்போது புற்றுநோய் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இது உங்கள் வேண்டுதல் மூலம் கிடைத்த வெற்றியாகும். திரும்பி வருவேன், இரடிப்பு சக்தியுடன் வருகிறேன். உங்கள் ஆசீர்வாதம் இருக்கும் வரை நான் நன்றாக இருப்பேன். எனது மனைவி கீதா அன்பாக கவனித்து கொண்டார். மைத்துனர் மது பங்காரப்பா குழந்தையை போல் என்னை பார்த்து கொண்டார். இதை மறக்க மாட்டேன். லவ் யூ ஆல் என்று கூறியுள்ளார்.
The post புற்றுநோயிலிருந்து குணமானார் சிவராஜ்குமார் appeared first on Dinakaran.