குஜராத் முதலமைச்சராகவும் பிரதமராகவும் அரசின் தலைமைப் பதவியில் 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பிரதமர் மோடி

3 months ago 26
குஜராத் முதலமைச்சராகவும் தொடர்ந்து நாட்டின் பிரதமராகவும் அரசின் தலைமைப் பதவியில் 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பிரதமர் மோடி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்கப் போவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, 2013ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து  2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் 2024ஆம் ஆண்டு 3வது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றார். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் கூறியுள்ள பிரதமர்மோடி, மக்களின் ஆசிகளே தன்னை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 
Read Entire Article