குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு

3 hours ago 2

அகமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் காலை 10.44 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் காலை 10.44 மணியளவில் லக்பத்தின் வடக்கு-வடகிழக்கே 76 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 3 ரிக்டர்களுக்கு மேல் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

முன்னதாக, கடந்த 7-ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. கடந்த மாதம், நவம்பர் 18ம் தேதி கட்ச் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நவம்பர் 15ஆம் தேதி, வடக்கு குஜராத்தில் உள்ள படான் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது.

குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ஜிஎஸ்டிஎம்ஏ) தரவுகளின்படி , கடந்த 2001 ஜனவரி 26-ஆம் தேதி ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர்.

The post குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article