குஜராத் மாநிலம் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

3 months ago 12

கச்: பிரதமர் மோடி இந்த ஆண்டும் குஜராத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார். இதற்காக தீபாவளி தினத்தில் எல்லைப்பகுதிக்கு சென்று வீரர்களை சந்தித்து தீபாவளி கொண்டாடுவார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் இந்த ஆண்டு தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார்.

அப்போது வீரர்களிடையே பிரதமர் கூறுகையில்,’தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லாத அரசு இங்கு அமைந்துள்ளது.

21ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு நாம் நமது ராணுவத்தை, பாதுகாப்பு படைகளை நவீன வளங்களைக் கொண்டு புதுப்பித்து வருகிறோம். உலகின் மிகவும் நவீனமான ராணுவத்துடனான போட்டியில் நமது ராணுவத்தை நிறுத்த விரும்புகிறோம். இதன் அடிப்படை நோக்கமே பாதுகாப்புத்துறை தன்னிறைவைப் பெறுவதுதான்’ என்று மோடி பேசினார். ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அசாமின் தேஜ்பூரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

The post குஜராத் மாநிலம் கச் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article