குஜராத் பாஜ எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குப்பதிவு

4 weeks ago 5

காந்திநகர்: குஜராத்தைச் சேர்ந்த பாஜ எம்.எல்.ஏ மீது போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள பிரந்திஜ் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ எம்எல்ஏ கஜேந்திரசிங் பார்மர். முன்னாள் அமைச்சர். இவர் மீது 2020 ஜூலை மாதம் ஒரு தலித் பெண் புகார் கொடுத்தார். அதில்,’ என்னை, கஜேந்திரசிங் பார்மர் காந்திநகரில் உள்ள எம்.எல்.ஏ குடியிருப்புக்கு அழைத்துச்சென்றார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்போது என்னிடம் உறவு வைத்தார்.

அதன்பின்னர் என்னை புறக்கணித்தார். ஒரு முறை எனது அழைப்பை எடுத்து பேசிய அவர், எனது சாதி குறித்து பேசியதோடு, நமது உறவைப்பற்றி பேசினால் கடத்தி துன்புறுத்துவதாக மிரட்டினார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் 2021ம் ஆண்டில், அந்த தலித் பெண், குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பா.ஜ எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து காந்திநகர் போலீசார் 376 (பலாத்கார தண்டனை), 506 (கிரிமினல் மிரட்டலுக்கான தண்டனை), பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் விதிகளின் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

The post குஜராத் பாஜ எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article