
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் 19.2 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 97 ரன் எடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தினால் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில்லுக்கு போட்டி கட்டணத்தில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.