சிங்கப்பூர்: நடப்பு உலக செஸ் சாம்பியனும், சீனா கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நேற்று நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13வது சுற்று, 5 மணி நேரத்துக்கு பின் டிராவில் முடிந்தது. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டதுக்காக சிங்கப்பூரில் 14 சுற்றுகளாக நடந்து வரும் போட்டிகளில் குகேஷ் – லிரென் மோதி வருகின்றனர். ஏற்கனவே முடிந்த 12 சுற்றுகளில் இருவரும் தலா 2 வெற்றிகளும், 8 டிராவும் பெற்றுள்ளனர். இதனால், இருவரும் 6 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் 13வது சுற்று போட்டி நேற்று நடந்தது. வெள்ளைக் காய்களுடன் குகேஷ் ஆட்டத்தை துவக்கினார். போட்டி குகேசுக்கு சாதகமாக இருந்தபோதும் கடைசி கட்டத்தில் இருவரும் சம நிலையில் இருந்ததால் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். இதனால், இருவரும் தலா 6.5 புள்ளிகள் பெற்றுள்ளனர். இறுதிச் சுற்று இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர் உலக சாம்பியன் ஆவார். டிரா ஆனால், டை பிரேக்கர் மூலம் சாம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
The post குகேஷ்- லிரென் செஸ் 13வது சுற்று டிரா: இன்று இறுதிச் சுற்று appeared first on Dinakaran.