கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை

5 months ago 33

 

கீழ்வேளூர்,அக்.9: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கீழ்வேளூர் மணல் மேடு, வடக்கு வெளி, கச்சனம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 1.30 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தேவூர், பட்டமங்கலம், வடக்காலத்தூர், இலுப்பூர், ராதாமங்கலம், குருக்கத்தி, கூத்தூர், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொது மக்களுக்கும், மேலும் சம்பா சாகுபடி பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு இந்த மழை பயன் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

The post கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Read Entire Article