கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து

2 months ago 17

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து வழங்கப்பட்டு உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சுமார் 225 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் மனநல பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இருக்கும் உள்நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு மனநல காப்பகத்தில் இயக்குநர் டாக்டர் எம் மலையப்பன் கூறியதாவது: அரசு மனநல காப்பகத்தில் 1980ம் ஆண்டு முன்னர் வரை அசைவ உணவு அளிக்கப்பட்டு வந்தது. அதற்குபிறகு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு அறிவுறுத்தல் படி, கடந்த திங்கள்கிழமை அசைவ உணவு வழங்கப்பட்டது. இதற்காக 80 கிலோ சிக்கன் எடுத்து கிரேவி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இங்கு 772 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 722 நபர்களுக்கு மட்டும் அவர்களின் விருப்பத்தின்பேரில் அசைவ உணவு வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட நோயாளிகள் திருப்தியடைந்தனர். இனி வருகாலங்களில் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் “ஆயிரம் மைல் பயணம் ஒரே அடியில் இருந்து தொடங்குகிறது” என இந்த விருந்து குறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கருத்து தெரிவித்துள்ளார்.

The post கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு அசைவ விருந்து appeared first on Dinakaran.

Read Entire Article