சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக தளபதி 69 எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சன்னி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தசூழலில், கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மேலாளர் ஜெகதீஷின் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய், கதிர், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி உடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பொங்கல் கொண்டாடும்போது இடம் பெற்ற காட்சிகளின் வீடியோவை ஜெகதீஷ் பழனிச்சாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது