
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைதொடர்ந்து, ஜவான் இயக்குனர் அட்லீ படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் கமல்ஹாசனும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சல்மான் கான் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் படமான 'பேபி ஜான்' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக றப்படுகிறது. மேலும், இதற்கான படப்பிடிப்பை இந்த வாரத்தில் அவர் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.