
சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக 'ரகு தாத்தா' படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் 'பேபி ஜான்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது அவர் 'அக்கா' என்ற ஒரு வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ், விஜய்தேவரகொண்டா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உள்ளிட்டோருக்கு ஜோடியாக உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பாலிவுட் படத்தில் ராஜ் குமார் ராவுக்கு ஜோடியாக இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.