கீரனூர் பொக்கன் குளத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை காப்பாற்றுவது எப்படி?

1 month ago 14

புதுக்கோட்டை,செப்.29: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பொக்கன் குளத்தில் கீரனூர் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது மழை வெள்ளத்தில் சிக்கும் பொது மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த நடைபெற்ற தத்ரூபமான ஒத்திகை பயிற்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேற்று கீரனூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பொக்கன் குளத்தில் மழை காலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எவ்வாறு காப்பாற்றுவது, நீர் நிலைகளில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது கட்டிட ஈடுபாடுகளில் சிக்குபவர்களை எவ்வாறு மீட்பது போன்ற உத்திகளை தீயணைப்பு துறையினர் தத்துவமாக செய்து காட்டினர். மேலும் மழைக்காலங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது அதன் மூலம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை எவ்வாறு செய்வது போன்ற பணிகளையும் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

மேலும் மாடி போன்ற பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது மரங்களிலிருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு கட்டி செல்வது விபத்து காலங்களில் பொது மக்களை காப்பது உள்ளிட்டவை களையும் செய்து காட்டினர். அப்போது அப்பகுதி மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக அங்கு வந்து பார்த்தனர். இதன் பின்பு இது வெள்ளை கால தடுப்பு நடவடிக்கையான ஒத்திகை பயிற்சி என்று தீயணைப்புதுறையினரும் அதிகாரிகளும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

The post கீரனூர் பொக்கன் குளத்தில் மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை காப்பாற்றுவது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article