கிழக்குக் கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

3 hours ago 1

சென்னை: கிழக்குக் கடற்கரைச் சாலை(ECR) – ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வரும் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வு மேற்கொண்டார். கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR), திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை, ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில், நிலஎடுப்பு, மின்சார வாரியத்தின் பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைத்தல், சென்னை குடிநீர் வாரியத்தின், குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளை இன்று (04.03.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார். களஆய்வுக்குப்பின் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்; சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR), போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், இதை விரிவுப்படுத்த 2009 ஆம் ஆண்டு கழக ஆட்சியின்போது, முத்தமிழறிஞர் கலைஞர் நிலஎடுப்பு செய்வதற்காக ரூ.10 கோடி வழங்கினார். அதன் பிறகு அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலம் இப்பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, திராவிட மாடல் ஆட்சி வந்தவுடனேயே நிலஎடுப்பிதற்காக ஏறத்தாழ ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யக்கூடிய அளவில் நிலமதிப்பு அதிகமாகி விட்டது. 2009 ஆம் ஆண்டில் நிலஎடுப்பு செய்திருந்தால், ரூ.10 கோடிதான் ஆகியிருக்கும். ஏனென்றால், நிலத்தின் மதிப்பு ஆண்டாண்டுக்கு கூடிக்கொண்ட இருக்கிறது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பார்த்தால், பல பேர் பெரிய பெரிய மாடமாளிகை கூடகோபுரம் போன்ற கட்டடங்கள் கட்டி விட்டார்கள். வியாபார நிறுவனங்கள் அதிகமாகிவிட்டது. இப்போது நிலஎடுப்பு செய்யும்போது, நிலத்திற்கு மட்டுமல்லாமல், கட்டடத்திற்கும் சேர்த்து பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஏறத்தாழ ரூ.1000 கோடி செலவில் நிலஎடுப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் , கிழக்குக் கடற்கரைச் சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிமாகி கொண்டபோகிறது. எனவே, ஆறுவழிச்சாலையாக விரிவுப்படுத்த வேண்டும் என்று, ஆணையிட்டதின் அடிப்படையிலும், நிலஎடுப்பு பணிகள் விரைந்து செயல்பட்டதன் காரணமாக, 95% சதவீதம் நிலஎடுப்புப் பணிகள் முடிந்து விட்டது. மீதம் 5% சதவீதம் நிலஎடுப்புப் பணிகள் உள்ளது. இரண்டொரு இடத்தில் நிலஎடுப்பு செய்யப்படவேண்டியுள்ளது. இப்பணி முடிவடைந்து விட்டால் முழுமையாக நிலஎடுப்பு பணிகள் முடிவடைந்து விடும் என்றும், மின்சாரத்துறை சார்பில், டிரான்ஸ்பார்ம்கள், மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள் 70% சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியிருக்கிற 30% சதவீதப் பணிகள் மூன்று மாத காலத்தில் நிறைவடைந்துவிடும் என்றும், பூமிக்கு அடியில் போகும் குடிநீர் குழாய்கள் பணி 65 % சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. 8.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதாவது கொட்டிவாக்கம் முதல் அக்கரை வரையுள்ள சாலைப் பணிகள் அனைத்து வரும் மே மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்றும் தெரிவித்தார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானல், பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் நடைபெறும் பணிகள், மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். அனைத்துப் பணிகளும் மே மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். நிலஎடுப்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா? பணிகளை விரைவுப்படுத்தலாமா? எங்கெங்கு பிரச்சனைகள் உள்ளது? என்பதை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை செயலாளர், தலைமைப் பொறியாளர்களும், இதில் எல்லைப் பிரச்சனைகள் இருப்பதால், சென்னை மாவட்ட ஆட்சியர், நிலஎடுப்பிற்காக உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர்களிடம் ஆய்வு நடத்தியபின் அதன் அடிப்படையில்தான் மே மாதம் பணிகள் நிறைவடையும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்கு இடையில் 6 வழிச் சாலை வந்தால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி? சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டது.

இப்பகுதியில் பலபேர்களும், தமிழ்நாட்டின் முன்னணி தலைவர்களும், முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, ஆறு வழிச்சாலை மட்டும் போதாது, கூடுதலாக உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்கள். திருவான்மியூரில் இருந்து தொடங்கி அக்கரை வரை 137 குறுக்குச் சாலைகள் உள்ளது. இந்த குறுக்குச் சாலையினால் ஆங்காங்கு சிக்னல் நிறுத்தி வாகனங்கள் செல்லும்போது, அக்கரைக்கு போகவேண்டுமென்றால் 45 நிமிடம் ஆகிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் , இதில் உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு ஆணையிட்டார்கள். அதன்படி சாத்தியகூறு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வின் அடிப்படையில் உயர்மட்டச்சாலை அமைக்க பரிசீலணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், OMR சர்வீஸ் சாலையில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மெட்ரோ இரயில் பணிகள் நிறைவடைந்தவுடன், சாலைகள் புதியதாக அமைக்கப்படும் என்றும், குழிகள் இருக்கும் இடங்களில் தற்காலிகமாக குழிகளை சீர்செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நீலாங்கரை-துரைப்பாக்கம் செல்லும் சாலையில் பாலம் அமைக்கப்படவுள்ளது. அதற்கு நிலஎடுப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. ஒப்பந்தம் கோரும் தருவாயில் உள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

The post கிழக்குக் கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Read Entire Article