நாகர்கோவில், டிச.18: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கிள்ளியூர் தாலுகாவில் டிசம்பர் 18ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு துவங்கி நாளை (19ம் தேதி) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும், கிள்ளியூர் தாலுகாவில் தங்கி ஒவ்வொரு கிராமத்திலும் கள ஆய்வில் ஈடுபட்டு , மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்திடுவர்.
மேலும் மாவட்ட கலெக்டர் 18ம் தேதி அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். எனவே கிள்ளியூர் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கிள்ளியூர் தாலுகாவில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.