கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 16 ஏக்கர் பரப்பளவில் ரூ. 15.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் இன்று (அக்.22) நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.2 கோடி மதிப்பீட்டில் வாகனங்கள் நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட்டு வரும் காலநிலைப் பூங்காவை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.