சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா பணிகள் மற்றும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் குறித்து அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். ஆய்வின்போது அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: ரூ.15 கோடியில் காலநிலை பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 20 அல்லது 25 நாட்களுக்குள் மக்களுடைய பயன்பாட்டிற்கு முதல்வர் அர்ப்பணிக்க இருக்கிறார். முடிச்சூரில் அறிவிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தையும் முதல்வர் இந்த காலநிலை பூங்கா திறப்பின்போது திறந்து வைப்பார். அடுத்த மாத இறுதிக்குள் நிச்சயமாக பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கிளாம்பாக்கத்தில் காலநிலை பூங்கா முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதல்வர் திறந்து வைப்பார்: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.