கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி

7 hours ago 4

பிலடெல்பியா,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

நேற்று முன்தினம் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் 'ஜி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணி 2-0 என்ற கோல் கணக்கில் வைடாட்டை (மொராக்கோ) தோற்கடித்தது. மான்செஸ்டர் அணியில் பில் போடன் (2-வது நிமிடம்), ஜெர்மி டோகு (42-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் யுவென்டஸ் (இத்தாலி) அணி 5-0 என்ற கோல் கணக்கில் அல் அய்னை (ஐக்கிய அரபு அமீரகம்) ஊதித்தள்ளியது.

'எச்' பிரிவில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- அல்-ஹிலால் (சவுதி அரேபியா) இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் ரெட் புல் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணி 2-1 என்ற கோல் கணக்கில் பசுகாவை (மெக்சிகோ) வீழ்த்தியது.

Read Entire Article