கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தேவாலயங்கள்

4 hours ago 3


ஊட்டி: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (புதன்) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான நேற்று கிறிஸ்துவ மக்கள் புத்தாடைகள், கேக், நட்சத்திரங்கள் ஆகியவைகளை வாங்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குவிந்தனர். இதனால், நகரின் முக்கிய கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

பெரும்பாலான தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துவ மக்கள் கேரல்கள் மூலம் வீடுதோறும் சென்று பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் பழமை வாய்ந்த தேவாலயங்கள் உள்ளன. மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயங்கள் அருகே சென்று சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

 

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தேவாலயங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article