திருவள்ளூர்: குமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் நூலகத்தில் புத்தக, புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். குமரி முனையில் வானுயர்ந்த நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட நூலகத்தில் புத்தகக் கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் முனைவர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் மணவாளநகர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் பாலச்சந்தர், மைய நூலக வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன், தாசில்தார் செ.வாசுதேவன் மற்றும் நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளுவர் சிலையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா: திருவள்ளூர் நூலகத்தில் புத்தக, புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.