பெரம்பலூர்,மே.20: கவுல் பாளையம் இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் தொடர் மலையால் நிரம்பி வழியும் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தி தரவேண்டும்- முகாமைச் சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (19ஆம் தேதி) திங்கட் கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக 84 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தனியாக 12 வீடுகள் கட்டிய இடத்தில், கழிவுநீர் கால்வாய் செப்டிக் டேங்க் வைக்கப் படவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு நாட்கள் மழை பெய்த காரணத்தினால் அந்த கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் வீட்டில் துர்நாற்றம் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே எவ்வளவு சீக்கிரம் அந்த கால்வாய்களை சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post கவுல் பாளையம் இலங்கைத் தமிழர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை appeared first on Dinakaran.