கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி ஏரியா சபா வார்டு கமிட்டி கூட்டம்

5 months ago 14

 

கிருஷ்ணராயபுரம், டிச.11: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரியா சபா வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிரு ஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 4வது வார்டில் ஏரியா சபா வார்டு கமிட்டி கூட்டம் பேரூராட்சி தலைவர். சேதுமணி மகாலிங்கம் தலைமையில் வார்டு கவுன்சிலர் ராதிகா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்கள் இரவு நேரங்கள் மற்றும் அவசர தேவைக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவளம் அரசு மருத்துவமனைக்கு செல்வது மிகவும் சிரமமாகவும் போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும் கிருஷ்ணராயபுரம் நகரப் பகுதியிலேயே அவசர சேர அவசிய தேவைக்காக, 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .

மேலும் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து மழைநீர் தேங்காதவாறு மண்ணடித்து மேடு படுத்தி தர வேண்டும் என்றும், சுற்றுச்சுவர் கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்.ரெத்தினம், மனு அளித்தனர். கூட்டத்தில் நாலாவது வார்டுகளில் செய்யப்பட்ட பணிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது மேலும் நடைபெறும் பணிகளும் இனி நடைபெற இருக்கிற பணிகளும் எடுத்துரைக்கப்பட்டது .கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கவுன்சிலர் ராதிகா தெரிவித்தார். கூட்டத்தில், 5வது வார்டு கவுன்சிலர் சசிகுமார், பேரூராட்சி எழுத்தாளர்.செல்வராணி வரித் தண்டகர்.சபரிமுத்து மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி ஏரியா சபா வார்டு கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article