கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 4 குறு வட்டங்களுக்கான ஜமாபந்தி இன்று துவக்கம்

1 day ago 4

கிருஷ்ணராயபுரம், மே 22: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நான்கு நாட்கள் வருவாய் தீர்வாயம் 1434-ஆம் பசலி ஆண்டு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் தாசில்தார் பிரபாகரன் முன்னிலையில் வருவாய் தீர்வாயம் 1434ம் பசலி ஆண்டு ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று (மே 22) கட்டளை குறுவட்டத்திற்குட்பட்ட பாலராஜபுரம், ரங்கநாதபுரம், வடக்கு ரங்கநாதபுரம், தெற்கு மாயனூர், மணவாசி ஆகிய கிராமங்களில் இருந்தும், நாளை (மே 23) வெள்ளிக்கிழமை திருக்காம்புலியூர், ராயபுரம் வடக்கு கிருஷ்ணராயபுரம் தெற்கு , சித்தலவாய், சேங்கல், முத்துரங்கம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.

3வது நாளான மே 27ம் தேதி சிந்தலவாடி குறுவட்டத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் வடக்கு, மகாதானபுரம் தெற்கு, கம்மநல்லூர், சிந்தலவாடி, கள்ளபள்ளி, பிள்ளபாளையம், கருப்பத்தூர் ஆகிய கிராம மக்களிடம் இருந்தும், நான்காவது நாளான மே 29ம் தேதி (வியாழக்கிழமை) பஞ்சப்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட சிவாயம் வடக்கு, சிவாயம் தெற்கு, பாப்பக்காபட்டி, வயலூர், வீரியப்பாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தந்த குறு வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் வருவாய்துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை கொடுத்து உடனடி தீர்வு காண கிருஷ்ணராயபுரம் வருவாய் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

The post கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 4 குறு வட்டங்களுக்கான ஜமாபந்தி இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article