கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1700 கன அடியிலிருந்து 3,436 கனஅடியாக உயர்ந்துள்ளது.
52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி. அணையில் 50.40 அடி உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது. கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் வினாடிக்கு 2,680 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கே.ஆர்.பி. அணையின் முன்புள்ள தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.