கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

3 months ago 21

 

கிருஷ்ணகிரி, அக்.7: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் 48.85 அடியாக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பாலும், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 459 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 655 கனஅடியானது. அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் பாசனத்திற்காக விநாடிக்கு 178 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், நேற்று 48.85 அடியாக நீர்மட்டம் இருந்தது.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணை பகுதியில் 48 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், கிருஷ்ணகிரி 47.60 மிமீ., ஊத்தங்கரை 42.60 மிமீ., தேன்கனிக்கோட்டை 31 மிமீ., தளி 25 மிமீ., நெடுங்கல் 24 மிமீ., ராயக்கோட்டை 17 மிமீ., போச்சம்பள்ளி 14 மிமீ., ஓசூர் 11.60 மிமீ., அஞ்செட்டி 10.60 மிமீ., கே.ஆர்.பி., அணை &10.20 மிமீ., பெனுகொண்டாபுரம் & 10.20 மி.மீ., கெலவரப்பள்ளி அணை & 9 மிமீ., பாரூர் 7 மிமீ., சூளகிரி 6 மிமீ., சின்னாறு அணை 5 மிமீ., என மொத்தம் 318.80 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

The post கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article