தேவையான பொருட்கள்
அரைக்க:
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை – 4 டேபிள் ஸ்பூன்
நாட்டுத்தக்காளி – 2 பெரியது
பூண்டு – 5
சின்ன வெங்காயம் – 5
சிறிதளவுகொத்தமல்லி தழை –
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
தாளிக்க:
கடுகு – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு பொறியவும், கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் கலந்து நன்கு கொதிக்க விடவும். அடுத்து செலவு ரசம் நுறை தட்டி பொங்கி வரும் போது கீழே இறக்கி பரிமாறி சுவைக்கவும்.
The post கிராமத்து செலவு ரசம் appeared first on Dinakaran.