சென்னை: கிரஷர் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அரசு விதித்துள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். புதிதாக சிறு கனிம நில வரி விதித்துள்ளதுடன், கனிமம் வெட்டி எடுப்பதற்கான வரியும் அதிகரித்துள்ளது. பழைய முறைப்படி கன மீட்டர் அளவில் அனுமதி வழங்கவும் கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறு கனிம நில வரியால் ஜல்லி, எம்.சாண்ட் விலை ஒரு யூனிட்டுக்கு தலா ரூ.1,000 வரை அதிகரிக்கும். தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட கிரஷர் குவாரிகள் உள்ள நிலையில் சிறு கனிம நிலவரியால் எம் சாண்ட் விலை உயரும். சிறு கனிம நில வரியால் ஜல்லி, எம்.சாண்ட் மீதான வரி 180 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
The post கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்..!! appeared first on Dinakaran.