கியா சைரோஸ் கார், பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தில் (பிஎன்சிஏபி) சோதனை செய்யப்பட்டது. இதில் பெரியவர்கள், குழந்தைகள் ஆகிய இருவருக்குமான பாதுகாப்பு சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32க்கு 30.21 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49க்கு 44.42 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன்மூலம் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் என்ற பெருமை இதற்கு கிடைத்திருக்கிறது.
சைரோசின் எச்டிஎக்ஸ் பிளஸ் பெட்ரோல் டிசிடி மற்று்றும் எச்டிகே (ஓ) பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களில் மேற்கண்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. கியா சைரோஸ் காரில் 13 வேரியண்ட்கள் உள்ளன. வேரியண்ட் துவக்க விலை சுமார் ரூ.9 லட்சம். டாப் வேரியண்ட் விலை சுமார் ரூ.17.8 லட்சம். 998 சிசி, 1493 சிசி என வேரியண்ட்களுக்கு ஏற்ப இன்ஜின் திறன் வேறுபடும்.
The post கியா சைரோஸ் கார் appeared first on Dinakaran.