கிணற்றுக்குள் மூழ்கிய ஆம்னி வேன் மீட்பு; 5 பேர் பலி

14 hours ago 3

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி வேனில் 8 பேர் சென்ற நிலையில் சாத்தான்குளம் அருகே வேன் கிணற்றுக்குள் பாய்ந்தது.

வேனில் இருந்த 8 பேரில் 3 பேர் பத்திரமாக வெளியேறிய நிலையில், 5 பேரை மீட்கும் பணி நடைபெற்றது. கிணற்றுக்குள் மூழ்கிய வேனை தீயணைப்புத் துறையினர் 2 ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், வேன் மீட்கப்பட்ட நிலையில் வேனில் இருந்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Read Entire Article