கிணறு வெட்டிய தொழிலாளி மண் சரிந்து பலி தவறி விழுந்து பெண் சாவு

2 months ago 6

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், காளப்பனஅள்ளி ஊராட்சி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது விவசாய நிலத்தில் 60 அடி ஆழ கிணற்றை ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். கீரியூர் பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (50) இந்த பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று பணியின்போது வெடி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து கிணற்றின் பக்கவாட்டில் மண் சரிந்தது. அதை அப்புறப்படுத்த முயன்றபோது மண் சரிவில் சிக்கி பச்சியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற தொழிலாளர்கள் அவரது சடலத்தை மீட்டனர். இந்நிலையில் கிணற்றை எட்டிப்பார்த்த பெரியாம்பட்டி, விருதானூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி முருகம்மாளும்(51) தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து பலியானார்.

The post கிணறு வெட்டிய தொழிலாளி மண் சரிந்து பலி தவறி விழுந்து பெண் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article