கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது

5 hours ago 2

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, இவரது நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' உருவாகி வருகிறது. இப்படத்தில் கிச்சா சுதீப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தில் டீசர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் எஸ். தாணு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

The Ruthless Hunt has begun! Dive into the electrifying glimpse of Max Monster's savage action. #MaxTrailer is OUT NOW!▶️ https://t.co/fApcPMJWzQ@KicchaSudeep @Kichchacreatiin @theVcreations @vijaykartikeyaa @AJANEESHB @shekarchandra71 @ganeshbaabu21 @shivakumarartpic.twitter.com/8svX2sYoEf

— Kalaippuli S Thanu (@theVcreations) December 22, 2024
Read Entire Article