
சென்னை,
'மகாபாரதம்' இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் கனவு படமாகும். இந்த பிரமாண்டமான படத்தில் குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றி நமது உண்மையான இந்திய இதிகாசங்களின் மகத்துவத்தை புதிய தலைமுறையினருக்கும், உலகளாவிய பார்வையாளர்களுக்கும் காட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம்.
சமீபத்தில் இப்படத்தில் நடிகர் நானி நிச்சயமாக இருப்பார் என்று எஸ்.எஸ்.ராஜமவுலி கூறினார். மறுபுறம், ராஜமலியின் தந்தையும் பிரபல எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத், 'மகாபாரதம்' மூன்று பாகங்களாக உருவாவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் சிறிது காலமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
'மகாபாரதம்' ராஜமலியின் கெரியரில் கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சுகள் இணையத்தில் உலாவருகின்றன. தற்போது ராஜமவுலி மகேஷ் பாபுவை வைத்து தற்காலிகமாக 'எஸ்.எஸ்.எம்.பி 29' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.