ஜம்மு: காஷ்மீர் மக்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக கூறி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக மெஹபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி கூறுகையில், ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில், உள்ளூர் காஷ்மீரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளதை கண்டிக்கிறேன். அவரது கருத்து பிளவை ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தானதாகவும் உள்ளது. மூத்த அரசியல் கட்சித் தலைவராகவும், காஷ்மீரியாகவும் இருக்கும் அவர், இவ்வாறு கூறுவது ஒட்டுமொத்த காஷ்மீரிகள் மற்றும் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. பிரிவினைவாத கருத்துக்களை தூண்டும்படி உள்ளது.
நாட்டு மக்களை காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிடுகிறது. தீவிரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான அடையாளத்தை ஒன்றிய அரசு வேறுபாடுத்தி பார்க்க வேண்டும். தீவிரவாதத்தை எதிர்க்கும் காஷ்மீரிகளை அந்நியப்படுத்தக் கூடாது. பஹல்காம் வழக்கில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும், பலர் துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன’ என்றார்.
The post காஷ்மீர் மக்கள் குறித்த சர்ச்சை கருத்து; பரூக் அப்துல்லாவுக்கு மெஹபூபா கண்டனம் appeared first on Dinakaran.