பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோஹ்லி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 52ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததோடு அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் 5 சிக்சர், அரைசதம் அடித்ததன் மூலமாக விராட் கோஹ்லி சிஎஸ்கே அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக கோலி தொடர்ச்சியாக அடித்த 4ஆவது அரைசதம் இதுவாகும். ஆர்சிபி அணிக்காக 300 சிக்ஸர்களை கடந்த கோஹ்லி தற்போது 304 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக கோஹ்லி அடித்த 10வது அரைசதம் இதுவாகும். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,146 ரன்கள் குவித்துள்ள கோலி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
The post தனி ஒருவன் சாதனை நாயகன்: விராட் கோஹ்லி appeared first on Dinakaran.