காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த இஸ்லாமிய தொழிலாளி

11 hours ago 2

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள். இந்த நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தன் கண்முன்னே அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பயங்கரவாதிகள் சையது அடிலை துப்பாக்கி சூட்டுக்கு இரையாக்கினர். உள்ளூர் வாசிகளுடன் இணைந்து இப்பெரும் முயற்சியில் ஈடுபட்ட சையது அடிலுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Read Entire Article