
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசினேன். நிலைமை குறித்த தற்போதைய விவரங்களை பெற்றேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.