ஸ்ரீநகர்: காஷ்மீரில், குறிப்பாக தெற்கு காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்திற்குள் இழுக்கும் வேலையை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் காலம் காலமாக செய்து வருகிறது. முன்பு, மத பிரசாரகர்களை வைத்து போதனை செய்து வந்த இந்த அமைப்புகள் இப்போது பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்து விட்டதால் டிஜிட்டலுக்கு மாறி விட்டன.
தீவிரவாத அமைப்புகள் ஆள்தேர்வுக்கு முக்கியமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், எக்ஸ் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம், போலி கணக்குகள் மற்றும் கண்டறிய முடியாத தனியார் நெட்வொர்க்குகள் மூலம் எளிதில் ஏமாறக் கூடிய இளைஞர்களை குறிவைக்கின்றனர்.
அத்தகைய இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டதும் அவர்களை தனித்தனி குழுக்களாக சேர்த்து இந்திய பாதுகாப்பு படையினரால் செய்யப்பட்ட அட்டூழியங்கள் என சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் செய்திகளை ஆன்லைனில் பகிர்கின்றனர். டெலிகிராம் போன்ற ஆப் மூலமாக மெய் நிகர் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். இவ்வாறு ஆன்லைன் தேர்வில் தேறியவர்களுக்கு பிறகு நேரடி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
The post காஷ்மீர் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைனில் ஆள்சேர்க்கும் பாக். தீவிரவாத அமைப்புகள்: பயங்கரவாதமும் டிஜிட்டல்மயமானது appeared first on Dinakaran.