காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்

2 months ago 14

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த உஸ்மான் மாலிக்(20) மற்றும் சோபியான்(25) என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 20-ந்தேதி கந்தர்பால் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த இருவர், ஒரு டாக்டர் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article