காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றிய பாதுகாப்பு படை

4 hours ago 1

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பராமுல்லா மாவட்டத்தில் உள்ள அங்கன்பத்ரி பகுதியில் பயங்கரவாத செயல்கள் நடைபெறுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் போலிசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் இணைந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில், அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர். அதில் 3 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 292 தோட்டாக்கள், 9 குண்டுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் ஆகியவை இருந்தன. இதனை பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

Read Entire Article