பாராமுல்லா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இன்றிரவு 9.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவு தெரிவிக்கின்றது.
இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.