
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடைசியாக 'யுத்ரா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயப்பூர்வம்' மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம், அடுத்ததாக வெளியாக உள்ள உங்கள் படம் எது? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், 'தெலுங்கு - 'தி ராஜாசாப்', தமிழ் - 'சர்தார்2', மலையாளம்- 'ஹிருதயப்பூர்வம்'. 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும்' என்றார். மேலும் , பல கேள்விகளுக்கு மாளவிகா பதிலளித்திருக்கிறார்.