காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: தப்பி ஓடியவர்களை தேடும் பணி தீவிரம்

3 months ago 13

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 2 இடங்களில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் எல்லையோர மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவி வருகின்றனர். அவ்வாறு இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுபிடிக்கின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 2 இடங்களில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அனந்த்நாக் மாவட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என பாதுகாப்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள கன்யார் என்ற இடத்திலும் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. கன்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள், 2 போலீசார் காயமடைந்தனர். துப்பாக்கிச் சண்டை நடக்கும் வீட்டின் அருகிலேயே கடும் புகையுடன் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: தப்பி ஓடியவர்களை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article