ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மிகவும் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் 30,000 முதல் 40,000 யாத்ரீகர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயில் அமைந்துள்ள நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு கத்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி, மதுபானம் விற்பனை, வைத்திருப்பது மற்றும் அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “கத்ராவில் இருந்து திரிகூட மலையில் புனிதகுகை அமைந்துள்ள 12கிமீ பாதை வரை, மதுபானம் மற்றும் அசைவ உணவு விற்க, வாங்க, சாப்பிட, வைத்திருக்க இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 2 மாதம் நடைமுறையில் இருக்கும்” என்றனர்.
The post காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயிலருகே மது, அசைவ உணவுகளுக்கு தடை appeared first on Dinakaran.